உள்ளிருப்பது அவளல்லவா

தட்டாமல் திறந்தாள்

திறந்துக் கொண்டது
என் இதயம்

தளிர் கொடியாய்
படர்ந்தாள்

இதயம் முழுதும்

அனுமதி கேட்டு
தட்டினேன் நானும்

திறக்கவில்லை
அவள்

இதயக்கதவு

வாயிற்காப்போனாய்
வாயிலில்

வந்து போவோர்களை
பார்த்தபடி

நானும்,
அவளும்!

கடைசிவரை அவள்
கண்களுக்கு

நான் புலப்படவில்லை!

இதயத்தின் துடிப்பாம்

லப்டப் என்ற ராகமும்

லயம் மாறிப்போனது
அவள் பெயராய்

அது நான் மட்டும்
அறிந்தது

எங்கே அது அவளுக்கு
புரிந்தது

கனத்துப் போனது
இதயம்

அது உடைந்து
போகாதிருக்க

நான் படும்பாடு
அப்பப்பா

உள்ளிருப்பது
அவளல்லவா?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (11-Apr-18, 10:49 am)
பார்வை : 145

மேலே