வசப்படும் என் வானம்
என்னுடைய
நினைவுகளில் மிச்சமென
தொடர்கிறது
கனவு
கீறப்படாத தோல்களின்
செதில்களாக
முளைவிடுகிறது
அச்சம்
சிறகொடிந்த பறவையின்
கூட்டில்
நெழிகிறது
காலம்
இன்னொரு கற்காலமென
இருண்டு
பொடியாகிறது
பொழுது
உடைபடும் எலும்புகள்
ஊன்றி
விரிகிறது
என் வானம்