அரசியல் ஆடுகளம்
மூடர் கூட்டம்
நாட்டை ஆள
தினம் தினம்
தவிக்கின்றோம்
இந்நாட்டில் வாழ!
கானல் ஆறும்
கரைபுரண்டோட
நாட்டைச் செழித்தது
என்பதுபோல!
இவர் திட்டம் யாவும்
மலைப்பைத் தரலாம்
விளைவை அறிந்தால்
நகைப்பே எனலாம்!
சோழர் ஆண்ட
தேசம் இன்று
கோழைகள் ஆள
விட்டுவிட்டோம்!
நாளை வாழ
இடம் இருக்காது
இவரே ஆள
இனியும் விட்டால்!
செத்தும் கொடுத்தார்
சீதக்காதி - பிறர்!
சொத்தும் எனதென்பார்
அரசியல்வாதி!
ஜனநாயகத்தின் அரிதாரத்தில்
பணநாயகம் நடக்குதம்மா!
முழுநாடாகம் போடும் இவர்கள்
நடுநாயகம்தான் பேசுவதென்ன?
அரசியல் பேச
உனக்கென்ன தகுதி?
போகிற போக்கில்
கேட்குது மனசாட்சி!
இவரே அரசியல் களத்தினில் இருக்கையிலே
எனக்கென்ன குறைச்சல்
இந்த மலத்தினைப்பற்றி
பேசிடவே!
எனது கிறுக்கல்கள்✍