மனம் வலிக்கிறது மாமனே
மனம் வலிக்கிறது மாமனே!
உன்னை காதலித்த பாவத்திற்க்கா எனக்கு இப்படி ஒரு தண்டனை?
நீ என்னை நீங்கி போன பின்னும் உன்னையே நினைத்துக் கிடப்பது என்ன காதல் வினையா?
இறுகி போகாத இதயம் இன்னும் உன்னை எண்ணி உருகி என்னை துடிக்க
வைக்கிறது உனக்காய்
விலகி போகும் காற்றை வலுக்கட்டாயமாய் இழுத்து வந்து சுவாசிக்கிறேன் உன்னைசேராது போயினும் உன் ஞாபகங்களையாவது வாழும் காலம் வரை சுமக்கலாமே என்றுதான்..
இரவுகள் கண்ணீரிலும் தலையணைகள் தனிமையிலும் என் ஜன்னல் கம்பிகள் வெறுமையிலும் இவற்றோடு
நீ தந்த காதல் தோல்வியில் நானும் தேய்கிறேன் ...
மனம் வலிக்கிறது மாமனே...விரும்பினேன் உன்னை என்னை விட கூடுதலாய்..இன்று கனவில் மட்டும் என் காதல் வாழ்கிறது ...அங்கும் உன்னை மட்டும் தேடுதலாய் நிகழ்கிறது என் காதல்...
சிலுவை சுமக்கிறேன் நானும் இயேசுவாக அல்ல உன் முன்னாள் காதலியாய் உன் நினைவு என்னும் சிலுவையை..
புல்லாங்குழலாய் உன் வார்த்தைகளை கேட்ட செவிகள் செவிடாகி போய்விட்டது என் காதலை நீ கேளாமல் போனதால்..
மனம் வலிக்கிறது மாமனே
என்னை விட்டு பிரிந்தாயே ...போகும்போதே என் உயிரையும் உணர்வையும் உ ன்னோடே கூட்டிப் போயிருக்க கூடாதா?
உன்னை இழந்து இரண்டும் என்னை கொல்கின்றன...
உன்னை நேசித்த என் மனம் வலிக்கிறது மாமனேஎன்னை பிரிகையில் நீயும் கண்ணீர் வடித்திருப்பாயோ என நினைத்து ...