விவாகரத்து செய்துவிட்டு
பார்த்தேன் நீ அழகாய் இருந்தாய் எனவே இரசித்தேன்..
பேசிட தொடங்கினேன் நீயும்
பாசமாகவே வார்த்தைகளை வீசிட தொடங்கினாய்...
முதலில் அளவாய் இருந்த நம் உறவு ...இப்போது அளவற்று போய்விட்டது....
உன் அழகை நான் வர்ணிக்க
பொய்சொல்லாதே என்று நீ சொல்ல மெய்யென்று சொல்லி உன் கன்னத்தை தீண்டிவிடுகிறேன் என் உதடுகளால்...
முன்பு பார்வைகளை மட்டும் பகிர்ந்துகொண்ட நாம் இன்று பாசத்தையும் பகிர்ந்துகொள்கிறோம்...
கனவில் காதல் செய்கிறோம்..நிஜத்தில் தொலைந்து கனவாய் போய்விடுகிறோம்...காதலில் காணாமல் போய்விடுகிறோம்..கொஞ்சம்.கள்ளத்தனமாய்...
நினைவிருக்கிறதா?.
.முதலில்உன்னை செல்லம் என்றபோது நீ நிராகரித்தாய் ..பிறகு நீயே என்னை பலமுறை அப்படிதான் கூப்பிடுகிறாய்...
எனக்கேதும் புரியவில்லை..இது சரியா?தவறா? தெரியவில்லை..
என்னிடம் பேசாதே என்று சொல்லிவிடுவேன்..ஆனால் உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது...
ஏனோ இந்த இனம் புரியாத உறவில்
இருவரும் புதைந்துகொண்டு இருக்கிறோம்...விளையப்போவது...என்னவோ தெரியவில்லை...உன்னால் உன் மேல் கிறுக்குப் பிடித்து நான் அலையப்போகிறேன் என்பது மட்டும் உறுதி...என் ஆசை மனதை வென்றவனே..நேசமழையில் என்னை நனைத்தவனே நான் உன்னோடே வந்துவிடுகிறேன்...என் உதவாக்கர கணவனை விவாகரத்து செய்துவிட்டு...