நீயும் நானும்
நீயும் நானும் கவிதை
நம்மை நாமே வாசிக்கிறோம்
நீயும் நானும் காதல் நம்மை நாமே நேசிக்கிறோம்
நீயும் நானும் குழல்
நம்மை நாமே இசைக்கிறோம்
நீயும் நானும் பூமி
நம்மில் நாமே வாழ்கிறோம்
நீயும் நனும் வானம்
நம்மில் நாமே இரவு பகலாகிறோம்..
நீயும் நானும் போதை நமக்கு நாமே அடிமை ஆகிறோம்
நீயும் நானும்கடல்
நம்மில் நாமே மிதக்கிறோம்
நீயும் நானும் வாழ்க்கை
நம்மில் நாமே வாழ்கிறோம்..
நீயும் நானும் மரணம் ..இதில் மட்டும் எனக்கு பதிலாய் நீயும் உனக்கு பதிலாய் நானும் இறக்கிறோம்...