வாழ்த்துக்கள்

மனம் நிறைந்து வாழ்க
நல்ல குணம் நிறைந்து வாழ்க
மகிழ்ச்சியில் ஓங்குக
துன்பம் எனும் தூதுவன்
இன்பம் எனும் வேதவன்
இல்லையே வாழ்க்கை ஏது
உழைத்திடு உடல் கசங்க
உணவு மருந்தாக மாறும்
உலகு உனதாக மாறும்
உயர்ந்திடு உன் உள்ளம் அளவில்
உயர்த்திடும் உலகளவில் உன் மனம் ..
தாய் பால் உண்ட நீ
தமிழ் பாலையும் உண்டிடு
தலைகனம் இன்றிடு
தலைவாசல் உன் வீடு
தலை நிமிர்ந்து சொல்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : சண்முகவேல் (14-Apr-18, 9:47 am)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : vaalthukkal
பார்வை : 1013

மேலே