மனம் எனும் மாயப் பேய்

சகலத் தகுதியும் உடைய அவளை எண்ணி

எத்தகுதியும் கிடையாத என்னை என்மனம்

காதலிக்கத்தூண்டி கையில் இருந்த தம்படி

அரைகுறையையும் தீரக் கரைத்து காதல்

முத்துக் குளிக்கச்சொல்லி என்னை உசுப்பி

பித்துப்பிடித்தலைந்திட வைத்ததென்

"மனம் எனும் மாயப் பேய்"
பெண்மையின்

இனம் சேரவிடாது விரட்டிட அதன் சூசகமான

குணம் இன்னதென அறிந் தப்பின்னும் கடும்

சினம் அதன்மேல் கொண் டென்ன லாபம் கூறும்

வனம் விட்ட கண்கட்டியக் கபோதியாய்த் திரிய

பணம் ஒன்றே ஜீவிதம் என் றெண்ணி மனம்

இரணம் ஆக்கியதை என்ன வெனச்சொல்ல

தினம் அதையே எண்ணி நாளை ஒட்டிட மன

ஊணம் உற்றேன்கேட் பாறற்று நானும் மது

பானம் ஏந்தலானேன் அதோடு மட்டுமன்று

ஏணம் ஏந்தி இரந்துண்ணும் கதிக்கு ஆளாகிட மதி

ஈனம் என்றல்லவா எண்ணு கிறேன் காதலை இன்று

ஞானம் பிறக்கின்றது கண் கெட்டப்பிண்ணே முதல்

கோணல் முற்றும் கோணல் என்பது சரியேயது

கானல் நீரைத்தேடினேன் காதல் தாகந்தீர

தணலில் நின்றுக்கொண்டு அது சாத்தியமோ

"மனம் எனும் மாயப் பேய்" நடுவில் பேயாகியே
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (14-Apr-18, 11:42 am)
பார்வை : 174

மேலே