குருதி பூக்கள்

மலடி என்ற பட்டம் நீங்க
என் குலம் காக்க வந்த சாமி நீ..

ஈறு ஐந்து மாதம் உன்னை என் கரு சிறையில்
சிறை வைத்தேன் என் என்பு மலரே ..
மன்னித்து விடு என் கண்ணே ..

உன்னை விடுதலை செய்யும் நாள் எண்ணியே
காத்திருந்தேன் என் அன்பு செல்லமே..

கருத்த மேகங்களுக்குள்
ஒளி வீசிய நிலவாய் நீ ..

சேற்றில் பூத்த செந்தாமரை போல
என் குருதியில் பூத்த பூ நீ...

மலர்ந்த பூ மணம் வீசுமோ
இல்லை பூத்த மலர்
கருகி போகுமோ
என்று ஏங்கிய நிமிடம்
வீர் என்று என் செவிகளில் சத்தம் ..

ஆம் என் பெண்மைக்கே
வாழ்க்கை கொடுத்த பூ நீ

என் கருவில் பிறந்த
ராகம்
இசைத்து விட்டது என எண்ணி மனதினுள்
மகிழ்ச்சி பொங்க
என் இரு விழிகளிலும் ஆனந்த விழி நீர் வழிய
என் இரு கைகளில் குருதி பூவை ஏந்தி கொண்டு ..

கண்ணே மணியே என்று
மார்போடு அணைத்த கொண்ட ஒரு நொடி ..
ஏழேழு ஜென்மத்திற்கும்
அணையா விளக்காய் நீ ..
நீடுழி வாழ வேண்டும் என் தங்கமே..

காய்ந்த சருகாய் கிடந்த என் வாழக்கையில்
பூத்த மலரே

என் முகத்தில் சிரிப்பு மலரை
பூக்க விட்ட என் குருதி பூவே

உன்னை சிறையில் வைத்ததற்கு
எனக்கு தண்டனை நம் தொப்புள் கொடி உறவு
அறுந்தது ..

அறுந்தது தொப்புள் கொடி மட்டும் தான்
நம் உறவு அல்ல என் அன்பு மலரே
என்றென்றும் தொடரும் நம் பாசமான பந்தம்..

கஷ்ட்டம் ஏதும் இல்லாமல்
சிறப்பானதொரு வாழ்க்கை வாழ
எந்நாளும் உன் முகத்தில் சிரிப்போடு
எந்நாளும் நலமாய் வாழ
அன்பு மலரே உனக்கு வாழ்த்துக்கள் ..

உன்னை போல் தினம் தினம்
பூக்கும் லட்சம் குருதி பூக்களுக்கும்
மலர்ந்த பூக்களுக்கும்
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ..

எழுதியவர் : ரோஜா (14-Apr-18, 11:51 am)
Tanglish : kuruthi pookal
பார்வை : 194

மேலே