கருப்பு சட்டை

கருப்பு சட்டை


நள்ளிரவு நேரம்...


ஊர் தூங்கிக்கொண்டிருந்த அந்த நள்ளிரவில் அந்த அப்பார்ட்மென்ட் படிகளில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தான் அவன். பகலில்லே அமைதியாய் கிடக்கும் வரந்தாராக்கள் அந்த நள்ளிரவில் இன்னும் அமைதியாய் அமானுஷ்யமாய் இருட்டடித்து கிடந்தது.
அவன் எதை பற்றியும் கவலைபடாமல் தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருந்தான் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே வந்தது.. ஒரு குறிப்பிட்ட அறை வந்ததும்,,

டொக்... டொக்..

உள்ளே சில சத்தங்களுக்கு பிறகு லைட்டை போட்டுவது புரிந்தது...

யாரு.., யாரு இந்த நேரத்துல..?

( பதிலில்லை )

நான்தான்..

நாந்தான்னா யாரு..? என்றபடியே கதவை திறந்தேன்...
வெளியே ரகு நின்று கொண்டிருந்தான்.
தலையில் கட்டு போட்டுக்கொண்டிருக்க, உடம்பில் அங்காங்கே சிராய்ப்புகளும் சட்டை கிழிசலுமாய் நின்று கொண்டிருந்தான்..

டேய் ரகு என்னடா இது கோலம்..?

ஒன்னும் இல்லடா என்ற படியே உள்ளே வந்து சட்டையை கலட்டி ஹாங்கரில் மாட்டினான் உடலில் அங்கங்கு லத்தி தழும்புகள் ரத்தம் கட்டி போய் இருக்க எனக்கு புரிந்தது..

டேய் இன்னைக்கும் போராட்டத்துக்கு போனியா...

ம்ம் ஆமா...

ஏன்டா இந்த வேண்டாத வேலை எல்லாம்.. எதுக்குடா போராடதுக்குலாம் போற..?

ஏன் போக கூடாது..?

இது என்ன பேச்சு அதுக்கு தான இந்த அரசியல்வாதிகளா ஒட்டு போட்டு அனுபிருக்கோம் அவங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன வந்துச்சு..?
அவங்க அவங்களோட கடமைய மறந்து பணம் சேர்க்கவும் பதவிய காப்பாதிக்கவும் ஆரமிக்கும் போது மக்களை பத்தி கவலைபட எங்க நேரம் இருக்கு..?

அதுக்காக ஏன்டா இப்படி அடிவாங்கனும்..?

ஒரு நல்லது அமையுதுனா யார் வேணாலும் எவ்வளோ வேணாலும் அடி வாங்கிக்கலாம்டா சரி பெய்ன் கில்லர் இருந்தா கொடுடா உடம்பு ரொம்ப வலிக்கிறது...

கிறுக்கு ஏன் இப்படி இருக்க.. வெளிய போய் வீரன் கணக்கா போரட்ட வேண்டியது அப்புறம் நல்லா வாங்கிட்டு இங்க வந்து வலிக்கிறதுங்குறது என்ன இது, என்ற படியே அவனுக்கு மாத்திரையை கொடுத்தேன் சாப்பிட்டு விட்டு துங்க துவங்கினான்..
நான் எனது கட்டிலில் வந்து படுத்தேன். எனக்கு தூக்கமே வரவில்லை.
ரகு உண்மையில் முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லை எப்பொழுதும் தானுண்டு தனது வேலையுண்டு என்றிருப்பான்.
ஜல்லிக்கட்டு புரட்சிக்கு கலந்த பின் தான் அடியோடு மாறிப்போனான்.. போராட்டத்தின் கடைசி நாளில் காவல்துறையின் வெறியாட்டத்தின் போது கை உடைந்து GH-ல் படுத்து கொண்டிருந்தவனை போய் சந்தித்தபோது

“மாப்ள நாம யாருன்னு காட்டிட்டோம்டா.!!! ” என்று கை வலியுளும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க சிரித்துக்கொண்டே சொன்னான்...

ஜல்லிக்கட்டு புரட்சி வெற்றி பெற்றாலும் அதன் பிறகு நடந்ததெல்லாம் கேலி கூத்துக்கள்..
ஜல்லிக்கட்டுக்காக துரும்பை கூட கிள்ளி போடாத அரசியல்வாதிகள் எல்லாம் வெற்றி தங்களாலே கிடைத்தது என்று பேனர் அடித்து கொண்டடிக்கொண்டிருக்க
களத்தில் கடைசி வரை இருந்து ரத்தம் சிந்தியவர்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது..

“ மாப்ள இவனுங்க எப்படி கேவலமா நடந்துக்குறாங்க பத்தியா இதாண்டா இவனுங்க லட்சணம்..”

அதன் பிறகு மக்கள் உரிமைகளுக்காக பல போராட்டங்கள் எங்கு நடந்தாலும் கலந்து கொண்டான், அடிகளும் மண்டை உடைப்புகளும் காயங்களும் இவனுக்கு சர்வ சாதாரணமானது, இதனால் வழக்குகள் பல இவன் மேல் நிலுவையுள் உள்ளன. அப்படி தான் இப்பொழுதும் போராட்டம் என்று மண்டை உடைந்து படுத்துக்கிடக்கிறான்.. இப்படி பல்வேறு நினைவுகளுடன் நான் தூங்கிப் போனேன்..

மறுநாள்..
மாப்ள மணி 9 ஆகிருச்சி இன்னுமா துங்குற எந்திடா...

நான் கண்களை இரவு சரயாக தூங்காததில் கண்கள் எரிந்தன..
நான் கண்களை முழித்து பார்த்தேன்..

டேய் எங்க கிளம்புற..?

போரட்டத்துக்கு தான் மாப்ள..

எனக்கு ஆத்திரமாய் வந்தது லூசாடா நீ..? நேத்து தான் அடிவாங்கி மண்ட ஒடஞ்சு போய் வந்துருக்க இப்போ மறுபடியும் போறியா பேசாம வீட்டுல இருடா..

அமைதியாக என்னை திரும்பி பார்த்தவன் சிரித்துக்கொண்டான்..

என்னடா சிரிக்கிற.? எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது..

மாப்ள இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல. எல்லாமே இங்க சரியா அமைஞ்சுருந்தா இங்க பிரச்சனையே இல்ல. தப்பு இங்க எல்லாமே தப்பாதான் அமைஞ்சுருக்கு அதான் பிரச்சனையே, மதவெறி துண்டுற ஒரு கட்சிக்கு ஒட்டு போட்டதால் தான் வட நாட்டுல அந்த கட்சிக்காரங்க ஆசிபா அப்படிங்குற ஒரு எட்டு வயசு சிறுமிய மாறி மாறி கற்பழிச்சு கொன்னுருக்கங்க.. அந்த குழந்தைக்கு இந்துனா என்ன முஸ்லிம்னா என்னனு தெரிஞ்சுருக்குமாடா.?
இங்க மக்கள் நலனுக்கு அக்கறை இல்லாம மத்திய அரசுக்கு ஒத்து ஊதுற ஆளும்கட்சி மக்கள் உணர்வுகள் புரிஞ்சுக்காம மண்ணை மலடாக்குற திட்டம் கொண்டு வந்து, தண்ணிய சேமிக்க வழி ஏற்படுத்தாம விவசாயிகள தற்கொலை செஞ்சுக்க வச்சு ஒரு அணையுல இருக்குற தண்ணிக்காக இன்னொரு மாநிலத்துக்கிட கையேந்துற நிலைக்கு கொண்டு வந்து ச்சே... இங்க இவ்வளவு போராட்டம் நடந்துட்டு இருக்க வந்து போனாரே நம்ம பிரதமர் ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை சொன்னாரா இப்படி எல்லாத்தையும் பண்ணா நாளைக்கு என்னத்தடா திம்பிங்க..? போதும்டா போதும். என் அடுத்த ஜெனரேசனாவது நல்லா இருக்கட்டும் அதுக்காக நான் இப்ப போரடுரதுல என்ன தப்பு..??

அதுக்காக இப்படியேவா போவ..??

“ மாப்ள நான் தமிழன்டா.. ”-என்று சிரித்தபடியே அந்த கருப்பு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்...

மாலையில்..

வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தேன்..

எனது செல்போன் அலறியது..
என் நண்பன் விக்கி..
ஹலோ.? சொல்லுடா..

டேய் எங்க இருக்க..?

இப்போதான் ஆபீஸ் முடிஞ்சு வெளிய வந்துட்டு இருக்கேன் என்ன விஷயம்டா..??

இன்னைக்கு நடந்த போராட்டத்துல போலீஸ் துப்பாக்கிச்சுடு நடத்துச்சு அதுல ரகு குண்டு பட்டு இறந்துட்டாண்டா..

என்னடா சொல்ற..? நான் அதிர்ந்தேன்..

நீ உடனே GH வா..

நான் அவசர அவசரமாய் எனதுபைக்கை ஸ்டார்ட் செய்து GH போய் சேர்ந்தேன்..
மரிசுவரியில் போய் பார்த்தபோது அனாதை பிணம் போல கிடந்தான்...

மாப்ள... உனக்காடா இந்த நிலைமை..? நான் கதறி அழுதேன்...

பின் அவனை கொண்டு போய் இடுகாட்டில் எரித்து...

பின்னொரு நாளில்...

நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்..
போராட்டத்தில் துப்பாக்கிச்சுடு நடந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் திவிரம் ஆக்குகிறது...

நான் கொடியை பாத்தேன் ரகுவின் “ கருப்பு சட்டை“ ஆடிக்கொண்டிருந்தது..
எழுந்தேன் அணிந்தேன்...

“ யாருக்கும் அஞ்சோம்
எதற்கும் அஞ்சோம்
எப்பொழுதும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் “

முற்றும்




எழுதியவர்
- அருள்.ஜெ

எழுதியவர் : அருள் ஜெ (14-Apr-18, 12:31 pm)
Tanglish : karuppu sattai
பார்வை : 446

மேலே