ஒருதலை காதல்
சிற்றரசு பேரரசு அனைத்துமே சிதறியதால்
–இங்கு
ஒற்றுமை உருக்குலைந்து போனது
அதனால்
அண்டை நாட்டானும் அயலானும்
-நம்மை
அடக்கியாள கட்டுண்டோம் அடிமையானோம்!
ஆன்மிகம் தலைவிரித்து ஆடியபோது
–நாட்டில்
நாத்திகம் சாட்டையை சுழற்றியது
அதனால்
மேல்தட்டு கீழ்தட்டு என்பதெல்லாம்
–இன்று
ஒரே தட்டாய் உலா வருகிறது!.
பச்சை பசும் வயல்களெல்லாம்
–இன்று
பன்னாட்டு நிறுவன ஏற்றுமதி களமாயின
வீடுகள் அனைத்தும் ஆறுமணிக்கே
கதவடைத்து
மாதர்கள் சீரியல் பார்த்தே சீரழியும்
காலமாச்சு!
சிறுசுமுதல் பெருசுவரை குடிப்பதுதான்
கொள்கை
கண்ணகி வாழ்ந்த நாட்டில் பெண்கள்
–இணையத்தில்
புகுந்து காதலில் விழுந்து –மறுத்தால்
தன்னுயிர் நீக்கும் கொடுமை கண்டோம்
சுதந்திரம் என்பது ஒரு வழிப்பாதையல்ல
–அது
பொதுநலம் காக்க தன்னலம் மறப்பது.
இன்பமும் துன்பமும் வாழ்வின் பொதுமறை
ஒருதலை காதல் சோம்பேறியின்
ஆயுள்சிறை .