தொலைந்து போன கடிதம்

கானாமல் போன கடிதம்
கானாமல் போகாமல்
இருந்திருந்தாலும் கூட
அவள் விரும்பியவனோடு
ஓடியே போய் இருப்பாள்

அவள் மேல் பெற்றோர்
உற்றார் உறவினர்கள்
வைத்திருந்த நம்பிக்கை
கண்ணீராக மாறி ஆறாக
ஓடித்தான் இருந்திருக்கும்

கட்டிவைக்கப் போவது
சொந்தமான ஒருவனுக்கு
கட்டவிழ்ந்து வேறு யாரோ
ஒருவனோடு ஓட இருந்தது
உரியோர்க்கு தெறிந்தது

நிச்சயம் பண்ண வரும்
நாளை குறிப்பிட்டனுப்பிய
கடிதத்தை நம் கண்ணில்
காட்டாமல் மறைத்தாளே
 இதோ அந்த "கானாமல்
போன கடிதம்" பாருங்கள்

கல்யாணம் சொர்கத்தில் நிச்சயமாகிறது என்பார்கள்
அவளின் தலை எழுத்தினை
அவளே எழுதி கொண்டாள்

எது எப்படியோ பொதுவாக
கடவுள் இணைத்ததை
மனிதன் என்றைக்கும் பிரிக்காதிருக்கட்டும்
மனிதனே இணைத்துக்
கொண்டதையும் கடவுளும்
பிரிக்காதிருக்கட்டும்
°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"தொலைந்து போன கடிதம்"
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (15-Apr-18, 8:42 am)
பார்வை : 88

மேலே