ஆனந்த மங்கை

சின்னஞ் சிறு சின்னஞ் சிறு சிறகே
சிதறி விழுவாய் மார் மீதே

வண்ண விரல்
இரண்டும் பட்டுக்
கன்னக்குழி சிவக்க
கண்ட விழி
கனவில் வந்து
வண்டைப்போல மிதக்க

ஓடும் நதியின் ஓசை
ஆழ்ந்த செவியில் வேறு
தலை வணங்கிய பின்னே
ஞாலம் மௌனம் ஆகும்

பாதம் எடுத்தடி
என் தலையில் வையடி
உன் பச்சை விரல் ரெண்டால்
என் மார்பைக் கீறடி

உன் பார்வை போதுமே
பழி பாவம் தீருமே
உன் மோகத்தீயிலே
ஒரு யாகம் மூலுமே
பாதி ஈரப் பாதத்தை
என் தலையில் வையடி

நான் மூழ்கும் கங்கையே
என் ஆனந்த மங்கையே !
நான் மூழ்கும் கங்கையே
என் ஆனந்த மங்கையே !

எழுதியவர் : ஓஷோ சிறிரதி (15-Apr-18, 8:44 am)
சேர்த்தது : ஓஷோ கஜன்
Tanglish : aanantha mangai
பார்வை : 256

மேலே