காதல் எனும் ஒருவழிப் பாதை

வளர்ச்சியை பொருத்து
உணர்ச்சிகள் புகுந்து
குளிர்ச்சியை தேடிடும் மன
கிளர்ச்சியோடு போராடி
நெகிழ்ச்சிக்கு அடிமையாகி
மகிழ்ச்சியில் நீந்திடவே இந்
நிகழ்ச்சியை  பெரிதாக்கி
புரட்ச்சியை தூக்கி நிறுத்தி
அதிர்ச்சிக்கு ஆளாகிடுவர்

பெற்றோர் காட்டும் வழி
காதலரே தேர்ந்திடும் வழி
இரண்டுமே இன்றைக்கும்
நினைத்தபடி நடப்பதில்லை
யாவரும் அறிந்ததுவே

காதலுக்குப்பின் மணம்
விரும்பிடும் செயல்
கல்யாணத்திற்கு பின் காதல்
நடப்பதாய் தெறியவில்லை

ஒன்று சீர்வரிசையோடு
வசதியை பெருக்கிடும்
போக்கு வரத்திற்கு குறை
விருக்காது இதுவே இருவழி
பாதை என்பின் தவறாகுமோ

ஒன்று அனைத்தையும்
இழந்து ஏழ்மை வகிக்கும்
" காதல் எனும் ஒருவழிப்
பாதை"  யில் பாதங்கள்
பாவிவிட்டதற்கு  பாவியை
பார்ப்பதைப் போலவே
பார்க்கின்றனர் அனைவரும்

வாழப்போகும் வாழ்க்கை
இரண்டிற்க்கும் ஒன்றுதான்
இரண்டிலுமே கிடைக்கும்
நிம்மதி என்பதும் ஒன்றே
அனுசரிக்கும் விதம் வேறு
•••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"காதல் எனும் ஒருவழிப் பாதை"
கவிதைமணியில்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (15-Apr-18, 9:32 am)
பார்வை : 230

மேலே