பாம்பு தோல்

சில பாம்புகளால் சொரசொரப்பான மரங்களில் ஏற முடியும், சிலவற்றால் மண்ணுக்குள் லாவகமாகப் புதைந்துவிட முடியும். உராய்வுகளும் சிராய்ப்புகளும் ஏற்படாமல் ஊர்ந்து செல்ல, பாம்புக்குக் கைகொடுப்பது அதன் உறுதியான தோல்தான். எப்படி?

சிந்தித்துப் பாருங்கள்: கனத்திலும் கட்டமைப்பிலும் பாம்பின் தோல் இனத்துக்கு இனம் வித்தியாசப்படுகிறது. இருந்தாலும், எல்லா பாம்பு இனங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதாவது, பாம்பு தோலின் வெளிப்புறம் உறுதியாக அல்லது கெட்டியாக இருந்தாலும் போகப்போக தோலின் உட்புறம் மிருதுவாக இருக்கும். இது பாம்புக்கு எப்படி உதவுகிறது? ஆராய்ச்சியாளர் மாரி கிறிஸ்டின் க்லைன் சொல்கிறார்: “வெளிப்புறம் கடினமாகவும் உட்புறம் மிருதுவாகவும் இருக்கும் எந்தப் பொருள்மீதும் அழுத்தம் செலுத்தப்படும்போது அதன் மேற்பரப்பின் மீது அந்த அழுத்தம் சரிசமமாகப் பரவுகிறது.” இப்படிப்பட்ட சிறப்பான கட்டமைப்பு பாம்பின் தோலுக்கு இருப்பதால்தான் அது நிலத்தில் ஊர்ந்து செல்கிறது. அதேசமயம், கூர்மையான கற்களால் அதன் தோலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கவும் முடிகிறது. பாம்பின் தோல் பல நாட்களுக்கு உறுதியாக இருப்பது ரொம்பவே முக்கியம், ஏனென்றால் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் பாம்பு சட்டையை, அதாவது அதன் தோலை உரிக்கும்.

பாம்பு தோலின் தன்மைகளை உடைய பொருள்கள் மருத்துவ துறையில் உபயோகமாக இருக்கும். உதாரணத்திற்கு, செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உடல் உறுப்புகள் உடலில் பொருத்தப்பட்ட பிறகு அந்த இடத்தைவிட்டு நகராமல், பல வருடங்கள் சேதம் ஆகாமல் இருக்கும். கன்வேயர் பெல்ட்டை பயன்படுத்தும் மெஷின்களிலும் இதேபோன்ற கட்டமைப்பைப் பயன்படுத்தினால் உராய்வைத் தடுக்கும் எண்ணெயின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாம்பின் தோல் பரிணாமத்தால் வந்திருக்குமா, அல்லது அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா?



JW லைப்ரரி

எழுதியவர் : (16-Apr-18, 2:59 pm)
Tanglish : paambu thol
பார்வை : 45

மேலே