ஆவுடையப்பன்

அகர அண்டம் உகரப் பிண்டம்
அகர விந்து உகர நாதமாம்
உகரநா தமதில் விந்திணைய உயிராம்
அண்டநா தமதில் பிண்டவிந் துசேரவும்
அண்ட வுலகில் பெருகும் பிண்டஉயிர்
ஆண்பெண் சேர்க்கை எண்ணிக் கைஇலாக்
கண்கா ணாத்தொழில் உலகின் பெருந்தொழில்
அண்டபூ மியிலித் தொழிலேப் பிரதானம்
ஆண்டவனே லிங்கமாய்த் தோன்றிச் சொன்னார்
உலகின் உற்பத்தியே லிங்கம்
ஆண்பெண் சேர்ந்த உருவாவு டை யப்பனே

வெண்பா
உருவ இறைச்சி வசக்தி உருவ
அருவமாம் ஆவுடை யப்பன் --- அருவம்
உருவம் தெரியாப் பொருளைக் குறிக்கும்
பருவம் புரியும் உரு

லிங்கம் அருவமெனின் லிங்கம் உருவமே
லிங்கம் அருவ உருவமாம் --- லிங்கம்
உடைகொண்ட அப்பன் உடைஆயிப் பீடம்
உடையுடைய ஆவுடையப் பன்

லிங்கம் சிவனாம் அகரசக்தி லிங்கபீடம்
பங்குபோட்ட ஆவுடை அப்பனாம் --- பங்கும்
சரிபாதி கொண்ட சபாபதி ருத்ரன்
சரியாவு டையப்ப னும்

1.சிவசக்தி உருவம் கொண்டவை. உருவம் இருந்தும் புரியாதிருப்பது அருவ உருவமாம்
2. லிங்கம் புரியாதது போலிருப்பதால் அருவமாகா ஏனெனின் அதற்கு உருவம் உள்ளது. ஆதலால் அது அருவ உருவமாம். லிங்கத்தின் அடிப்பீடம் ஆ-எனும் சக்தி லிங்கத்தைச் சுற்றிச் சூழ்ந்துள்ளது. அதுவே லிங்கத்திற்கு உடையாக அமைந்துள்ளது. ஆ-வெனும் உடையைக் கொண்ட அப்பன் ஆதலால் ஆவுடை அப்பன்.

எழுதியவர் : பழனி ராஜன் (18-Apr-18, 7:06 am)
பார்வை : 437

மேலே