வெள்ளை யானையா எங்கே கிடைக்கும்
யானைப் பாகனே யானைப் பாகனே !
நீ சொன்னதையெல்லாம் நான் எவ்வளவு கேட்கிறேன்
எனக்கு ஒரு உதவி செய்யேன் என்றது பெண் யானை !
சொல் செய்கிறேன் என்றான் பாகன் !
எனக்கு ஒரு நல்ல வெள்ளை யானையைப் பார்த்து
திருமணம் செய்து வை என்றது பெண் யானை
வெள்ளை யானையா ? எங்கே கிடைக்கும் என்று
மயங்கி விழுந்தான் யானைப் பாகன் !
பக்கத்தில் இருந்த வாளியிலிருந்து தண்ணீரை எடுத்து
தும்பிக்கையால் முகத்தில் பீச்சி மயக்கத்தை தெளிவித்தது .
வெள்ளை யானை இந்த உலகத்தில் கிடைக்காது .
அதுதான் போகட்டும் . என்னை வெள்ளையாக்கிவிடேன் என்றது !
எப்படி என்றான் பாகன் !
எனக்கு தினம் FAIR & LOVELY தேய்ச்சுவிடேன் என்று நாணத்துடன் சொன்னது பெண் யானை .
என்னது உனக்கு தினம் FAIR & LOVELY யா ........???? மீண்டும் மயங்கி விழுந்தான் பாகன்