வலியோடு நீ

அவன்
வார்த்தைகள்
உண்மையில்
வலியைத் தந்தன ...!

என் வேதனையின்
வலியை உணர்த்த
நினைத்து
மீண்டும் நானே
மரணித்து போனேன் ..!!

உன் மகிழ்வை
தொலைப்பதில்
எனக்கு
விருப்பமில்லை ...

என் பெரும்
மகிழ்வாய்
இன்றும் உனையே
நினைக்கிறேன் ..!!

என்
அமைதி உனக்கு
வலியானால்
உன் வார்த்தையின்
ஆழம்தான்
என் வாயடைத்தது ..

உன்
இறப்பு வேண்டி
என் நா மன்றாடுமானால்
அதை நான்
துண்டிக்கவும்
செய்வேன் அன்றோ ...!!??

என்னைதான்
இன்றும் வெறுக்கிறேன்
உண்மையில்
என்னைத்தான்
வெறுக்கிறேன் ....!!

நினைவே
போய் விடாதே
அன்றே
நிறைவாகிவிடும்
என் நாள் ..!!!

எழுதியவர் : ஸ்வீட்லின் (20-Apr-18, 12:08 pm)
சேர்த்தது : sweetlin
Tanglish : valiyodu nee
பார்வை : 469

மேலே