காதலென்னும் கேள்விக்குறி

முழைத்து முடியாத
மூன்றிலையில்
பிஞ்சிலே
பழுத்த காதல் ..!!

வளமையின்
பக்கங்களில்
வறுமையின்
வரிக்கோடுகள் ...

தேர்ந்து
தெளியாமல்
தேவையில்
பகிர்வு நடத்தி
தேர்ச்சி பெற
துடிக்கும் ..

நீயும் நானும்
விடையென பகுத்து
அன்பை
நீயா நானா
போட்டியில் வகுக்கும் ..

பூர்வ ஜென்ம
பந்தமென
பூர்வீகமே மறந்து
அனுபவமில்லா அறையில்
அனுமதி கேட்டு நிற்கும் ..

வெகுமதி
எதிர்பார்த்து
வெகு நேரம்
நாடகம் நடத்தும் ..

வகுப்பறை
நாளிலும்
பள்ளியறை
ஒத்திகை பார்க்கும் ...!!

சுற்றம் மறந்து
சூன்ய வலைக்குள்
சிக்கி வாழ்வை
தொலைக்கும் ...

நஞ்சென்றறிந்து
நாவால்
ஒருமுறையேனும்
ருசி பார்க்க
துடிக்கும் ...

பிள்ளையே ...!!
நீ
ஒரு நாளும்
செய்யாதே
இந்த தவற்றை ...
தொல்லையாவாய்
உணர்வுக்கு
எல்லையாவாய்
உறவுக்கு
வில்லன் ஆவாய்
ஊனுக்கு ...!!!

எழுதியவர் : ஸ்வீட்லின் (20-Apr-18, 11:51 am)
சேர்த்தது : sweetlin
பார்வை : 101

மேலே