இந்த நிலை

இந்தியத் தம்பதியர் பலரின்
இன்றைய நிலை இதுதான்-
பிள்ளைப் பாசம்
பீஸ்கட்டி வளர்கிறது
பப்ளிக் ஸ்கூலிலே,
பெற்றோர் பாசம்
சுற்றி வருகிறது
முதியோர் இல்லத்திலே..

இவர்கள் இருவரும்
இல்லத்திலிருந்து
என்ன சாதிக்கப்போகிறார்கள்
இந்த மண்ணில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Apr-18, 6:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : intha nilai
பார்வை : 79

மேலே