ஆபாச உலகம்

கோபத்தின் கோரத்தில் வார்த்தைகளில் கவனம் கொள்கிறேன்.

இலவசமாய் இணையம் தந்தான்,
இணையம் வசதியுடனே கைபேசி தந்தான்,
இணையம் முழுவதும் ஆபாசத்தை நிரப்பினான்,
விடிந்ததும் இளைஞன் காணும் தரிசனம் பெண்ணின் நிர்வாணம்...

மேலைநாட்டின் பாணியில் கலாச்சாரம் சாகடிக்கப்பட்ட தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி ஆபாசத்திற்கே வித்திட உலகமா இது?
இல்லை,
இதுவே நரகம்...

கோபத்தின் உச்சத்தில் வார்த்தைகளில் கவனம் கொள்கிறேன்.

பெண்ணை நிர்வாணமாக வடித்து சிற்பக்கலை என்கிறான்,
பெண்ணை நிர்வாணமாக வரைந்து ஓவியக்கலை என்கிறான்,
பெண்ணை நிர்வாணமாய் வர்ணித்தே கவிதைகள் என்கிறான்,
அறிவொழுக்கமில்லா இவனை என்ன சொல்லித்திட்டுவது?

கோபத்தின் எல்லையில் வார்த்தைகளில் கவனம் கொள்கிறேன்.

பத்து வயது சிறுவனின் கையில் மின்னுகிறது கைபேசி,
அதில் அவன் படிப்பதெல்லாம் காமக்கதை,
இதுவே தொடர்கதை என்றால் அறிவு வளர்ச்சி எப்படி இருக்கும்?

கோபத்தின் மிகுதியில் வார்த்தைகளில் கவனம் கொள்கிறேன்.

ஏதோ ஒன்றை இணையத்தில் தேட, விளம்பரமென்று வந்து நிற்கிறது ஆண்குறி படம்.
பணத்திற்காக, வியாபாரத்திற்காக பாலுணர்வைத் தூண்டும் இணையங்களோடு தொலைகாட்சியும் திரையுலகம் சேர,
வெறுக்கிறேன் இவ்வுலகை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Apr-18, 7:39 pm)
பார்வை : 1203

மேலே