வேண்டாம் இந்த உலகம்
இப்போது படித்த நவீன நாகரீக உலகில் அம்மாவின் அன்பு கிடைக்கும் வாட்சாப்பில்.
தந்தையின் பாசம் கிடைக்கும் பேஷ்புக்கில்.
ஆபாசத்திற்கு சங்கம் வைத்து பரப்புகிறார்கள் பேஷ்புக்கிலும், வாட்சாப்பிலும்.
இதெல்லாம் தவறு என்று தெரியாமல் செய்யவில்லை.
தவறே கிடையாதென்று ஆணவத்தில் செய்யப்படுகிறது.
உதாரணங்கள் மலிந்தே கிடக்கின்றன.
திருத்திக்கொள்ள தைரியமில்லை.
மனம் வரவில்லை.
உண்மை இப்படி இருக்க சமுதாயம் எப்படி மாறும்?
அது குற்றங்களை நோக்கியே நகரும்.
தங்கள் குழந்தைகளுக்கென்று நேரம் ஒதுக்கும் பெற்றோர்களைக் காண்பது அரிது.
குழந்தைகள் படிக்கவில்லை என்று அடிக்கும் பெற்றோர் தவறு செய்யாதே,
ஒழுக்கமாக வாழ், என்று சொல்லிக் கொடுத்து வாழ்வதில்லை.
பணம், சொத்து, ஆடம்பரம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறார்களே தவிர தன் குழந்தைகளை தட்டிக் கொடுத்து வழிகாட்டி வாழ்வதில்லை.
பள்ளிக்கூடம் அனுப்பினால் அங்கு தான் சரியான வழிகாட்டல் இருக்கிறதா?
இல்லையே,
எல்லா நிலைகளிலும் தவறுகளில் ஊறிப்போன சமுதாயம்,
தவறுகள் குழந்தைகளின் மனதில் படியக் காரணமாகிறது.
பழி உணர்வுகளும், பாழான எண்ணங்களும் இதயத்தை நாசமாக்கிட பலியானவர்கள் பல கோடி...
வேண்டாம் இந்த உலகம்...