மனிதம் எப்போது ஆளும்

ஈராக் , சிரியா படுகொலையா
இஸ்லாமியன் போராட வேண்டும் ,.

இலங்கை படுகொலையா
தமிழன் போராட வேண்டும் ,.

உயிரென்று , நம் உறவென்று
உணர்ந்து மனிதம் எப்போது
போராடும் .

சிறுபான்மை , பெரும்பான்மை
காட்டு விலங்கிற்க்கு பொருந்துமன்றில் ,

நாட்டு மாந்தர்க்கு பொருந்தியது
எப்படியோ ?

வாழ்வதற்கும் , ஆள்வதற்கும்
பெரும்பான்மை வேண்டுமென்றால் ,
ஈக்களும் , கொசுக்களும்
கடல் மீன்களும் ஆளவேண்டுமே
நம்மை.

எழுதியவர் : (21-Apr-18, 8:52 am)
பார்வை : 71

மேலே