எல்லைக்கோடு

எல்லைக்கோடென்று
ஒன்று இராதிருந் திருப்பின்
உன்னுடைய என்னுடையது
எல்லைத் தகராறு வந்திராது
நம்முடையது  என்றாகியே
இருந்திருக்கும் நிச்சயமாக

நரகமதை சொர்க்கமாக்கி
சுதந்நிரம் எனும் !
பாலினை கறந்து வைக்க
அதைப்பருக !
பூனைகளை விடுவோமோ
கண்மூடித்தனமாய் !
அதை தடுத்து காத்திடவே
எல்லைக்கோடு !

வேலியிட்டு ஏவல் வைத்தும்
ராப்பகல் காவல் வைத்தும்
தகராறு துளிரிது தீர்வின்றி

இயற்கை வானம் வனம் பாலைவனம் !
மலை ஆறு கடலக்கும் விதி விலக்கில்லை !

அதன் ஓரம்பாரம் அடிவாரம் வாழும் உயிர்கள் !
குனிந்து வளைந்து தினம் உழைத்தும் !
வயிற்றை கழுவ விடாமல்
உடமை இழப்பு !
மிரட்டும்  உயிரை பறிக்கும்
தீவிரவாதம் !

மனது போதுமெனும் மனமே
எல்லைக்கோடு !
நிலத்திற்கு அதன் வரம்பே
எல்லைக்கோடு !
ஆறுகடலுக்கதன் கரைகளே
எல்லைக்கோடு !
வீட்டுக்கு நாலு சுவர்களே
எல்லைக்கோடு !
நாட்டுக்கு நட்புறவுகளே
எல்லைக்கோடு !
தேசத்திற்கு நல் அமைதியே
எல்லைக்கோடு !
உலகிற்கு நல் சமாதானமே
எல்லைக்கோடு !

மன்னர்களாட்சி  தொட்டு
மல்லுக்கட்டினர் !
மக்களாட்சி ஆனபோது
பல்லை கொட்டினர் ! - இனி
தேவர்களாட்சி வந்திடினும்
மீட்சி ஒன்று தருமா !
•••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
" எல்லைக்கோடு"
கவிதைமணியில்•

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Apr-18, 9:35 am)
பார்வை : 70

மேலே