நிலவுக்கு அல்லி மலருடன் காதல்

வானூறும் நிலவுக்கு
அல்லி மலருடன் காதல்
அல்லி மலருக்கு
நிற்கும் நீருடன் காதல்
நிற்கும் நீருக்கு நீந்தும் கயலுடன் காதல்
நீந்தும் கயலுக்கு இவள் விழியுடன் காதல்
இவள் விழிக்கு என்மீது காதல் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-18, 2:36 pm)
பார்வை : 76

மேலே