நெல்லுக்கிறைத்த நீர்
முள்ளுக் கிறைத்தநீர்
முளைக்கக் கூடாத இடத்தில்
முளைத்து மனுக்களை ;
படுத்தக்கூடாத பாடு படுத்தும்
பயணிக்கும் பாதைகளில்
பாதத்திற்கு பாதகமிழைத்து!
கொள்ளுக் கிறைத்தநீர்
வித்தை விளைவித்து சக்தி
தனை பெருக்கும் புறவிக்கு;
அப்பிறவிக்கு பிறப்பாகி
தன்னையே தாரை வார்த்து
அதிலொரு சுகம் காணும்
எள்ளுக் கிறைத்தநீர்
நல்லெண்ணைக்கு உபறி
யாகி வருமானம் பெருகிட;
வித்தினைப் பெருக்கியே
நெத்தினை தந்து சொத்து
சுகம் கண்டு களித்திடும்!
கல்லுக் கிறைத்தநீர்
மண் குளிர்ந்து மகிழ்ந்திடும்
கருமியாய் பலர் தெரிவார்;
தணல் தாங்கா துருகிடும்
வெண்ணெய் போல் சிலர்
உயிரையும் கொடுத்திடுவர்!
நெல்லுக் கிறைத்தநீர்
களையாய் முளைக்கும்
புல்லும் தாகப்பசித்தீரும்;
உள்ளோர்க்கு சேரும் தனம்
இல்லார்க்கு பயன் இல்லை
கள்ளவராகி பதுக்குவதால்!
••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"நெல்லுக்கிறைத்த நீர்"
கவிதைமணியில்