வான மழை நீ எனக்கு
ஊணக் கண்யிரண்டிற்கும்
துணை என்றும்
ஞானக் கண்ணே உணரு தலை உணர்த்தும்
"வான மழை நீ யெனக்கு"
வாழ்கிறேனுன்னாலே
கான கருங்குயில் காணக்
கிட்டாத போதிலும்
கூக்கூவெனக் கூவியது கருங்குயிலெனக் கூற தவறென கூறிவிட மாட்டா ரெவரும்
உணர்வினை உணர்த்தும்
"வான மழை நீ எனக்கு"
வாழ்கிறேனுன்னாலே
விழிகளே இல்லாதார்க்கு
உணர்வே கருத்தாய்
உணர்ந்திடும் வழிகளும்
"வான மழை நீ எனக்கு"
வாழ்கிறேனுன்னாலே
கண்ணுள்ளோர் கைக் கொடா
விடிலும் கைக்கொம்பே
உணர்வை கொடுத்தெனை
உயிர் வாழ்ந்திட வைக்கப் படுகின்றததுவே அதனினும் வேரென்னத் தேவை "வான மழை
நீ எனக்கு" இறைவன் நீயே வாழ்கிறேனுன்னாலே
••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"வான மழை நீ எனக்கு"
கவிதைமணியில்