பூக்களின் போராட்டம்

பூக்களின் போராட்டம்
மலராமல் மொட்டாக நின்றன !
தென்றலும் இளவேனிலும்
தூது போயும் பயனில்லை
குயிலின் இசையிலும் இசையவில்லை
அழகிழந்து வருந்தி நின்றது தோட்டம் !
புன்னகையுடன் அவள் நுழைந்தாள்
மெல்ல மலர்ந்தன பூக்கள்
நானும் நுழைந்தேன் கணினியுடன்
மகிழ்ந்து முழுதும் மலர்ந்தன பூக்கள்
புன்னகையுடன் உறவாட ஓர் அழகிய பெண்ணும்
போற்றி புகழ் பாட ஒரு கவிஞனும் வந்த பின்னும்
மலர்கள் மலரவில்லை என்றால் ...
அது மலர்களுக்கு அவமானமன்றோ !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-18, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : pookalin porattam
பார்வை : 82

மேலே