பெண்மை என்ற பேரிளம்

பெண்மை என்ற பேரிளம்

கடந்த தொடர்களில் பெண் இனம் வீழ்த்தபட்ட வரலாறுகளை குறித்து எழுதி இருந்தேன். பெண் இனத்திற்கு சமுதாயம் திட்டமிட்டு வழங்கிக் கொண்டிருக்கும் சவுக்கடிகளை குறித்து எண்ணும்போது i வேதனைகள் மனதில் வந்து ரணபடுத்தும் ..

பூமித்தாயின் பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் பெண் இனம் அலங்கத்திற்குள் அங்கீகரிக்கபட்டதா? என்ற வினா எழுந்தால் விடை ஒன்றாம் வகுப்பு மாணவன் வாங்கிய முட்டை மதிப்பெண் போல காட்சி தரும் ..

பெண் இனத்தை அடிமைசாசனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதில் மதத்திற்கும், மத சார்பு உடைய விடயங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு ,

அழகு என்று வர்ணிக்கப்பட்ட பொழுதெல்லாம் பெண் இனத்தின் அவயங்கள் தான் முன் நிறுத்தபட்டன இந்து ,முஸ்லீம் கிறிஸ்தவ மதங்கள் உயர்வான இடத்தில பெண்ணை வைப்பதாக ஒரு வித்தை காட்டி பெண் இனத்தை அடிமையாக வைத்து கொண்டன ..

விவிலியத்தில் இடம் பெற்ற பெண்களை குறித்த கருத்துக்கள் பெண் என்பவள் அடிமைக்காக படைக்கப்பட்டவள் என்பதையே வலியுறுத்தின ..

பெண்ணை நம்பி அவள் மேல் பாசம் வைத்து பாதையை தொலைக்கும் மாந்தர்கள் வாழ்வில் வசந்தம் பெறுவது அதிசயம் .பெண்ணை துறப்பவன் வேதனை அடையமாட்டான்என்ற விவிலியம் ..பெண் கொடூரமாகவும் ,பிறரை அழிப்பவளாகவும் சித்தரிக்கிறது ..

வாழ்க்கை துணை அமைவது இறைவன் கொடுத்த வரம் என முன்னோர்கள் சொன்னார்கள் .விவிலியம் பூப் போன்ற மனதும் புன்னகை ததும்பும் குணமும் ,கவிதை போன்ற சிரிப்பும் கொண்ட பெண்ணை இல்லற துணையாக கொண்டவன் பாக்கியம் செய்தவன் என்கிறது ...


ஆண்கள் என்ன செய்தாலும் அதை தாங்கி கொண்டு அவனுக்கு சேவை செய்யும் பெண் நல்ல குணம் கொண்டவளாம் ..ஆண்கள் சகுனி புத்தி எப்படி எல்லாம் வேலை செய்து பெண்ணை அடிமை படுத்தி கொண்டது என்பது இதில் இருந்து தெள்ள தெளிவாக புரியம் ..இந்த வழி முறையைத்தான் இலக்கியங்களும் செய்தன .எந்த இலக்கியங்களும் இதற்கு விதி விலக்காக அமையவில்லை .

.தமிழ் இலக்கியத்தில் நற்றிணை தொகுப்பில் கூட பெண்கள் காமத்தின் தாகம் தீர்க்கும் சந்நிதிகளாக மட்டும் அடையாளபடுத்தபட்டு இருப்பார்கள் ..

தமிழ் இலக்கியத்தில் நற்றிணை தொகுப்பிற்கு முக்கிய இடம் உண்டு .நானுறு பாக்களை கொண்ட இந்த நூல் பாண்டியன் பன்னாடு தந்தான் மாறன் வழுதி தொகுத்து இருந்தான் .. சங்க காலத்தின் அடையாளமாக கருத பட்ட நக்கீரர் எழுதிய ஏழு பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்று உள்ளன .

நக்கீரரின் முதல் பாட்டில் ஒரு ஜீவனுள்ள ஒரு காதல் பேசப்பட்டது .நெய்தல் நிலத்தில் நடைபெறுவதாக அமைந்த பாடல் அது.

தலைவன் வருகைக்காக தலைவி காத்து இருக்கிறாள் ...தலைவன் வருவானா? ,அல்லது வர மாட்டானா? என்ற குழப்பம் தலைவியிடம் .நிம்மதி தொலைகிறது ,,தூக்கம் வர மறுக்கிறது...
வேதனையில் பாடுகிறாள் ...தென்றல் போல வீசிக்கொண்டிருந்த மெல்லிய காற்று, சினந்த போர் வீரனின் வாள் போல வேகமாக வீச தொடங்கிவிட்டது .. கடலில் பல நாட்டு வணிக பொருட்களை சுமந்து கொண்டு அன்னப்பறவை போல அசைந்து செல்லும் கப்பல்கள் காற்று வீசும் வேகத்துக்கு தாக்கு கொடுக்க முடியாமல் சுமந்த பொருட்களை கடற்கரையில் இறக்கி விட்டன.,, வானில் விளையாடி கொண்டிருக்கும் நிலவை விலைக்கு வாங்கி கொண்ட நிறத்தில் இருந்த கடற்கரை மணலில் குவிக்கப்பட்ட பொருட்கள் அலைகளுக்கு தடுப்பு சுவர் போல விளங்கிறது ..

கடற்கரை ஓரமாக ஓங்கி வளர்ந்து இருந்த புன்னை மரங்களில் தலையாட்டி சிரித்து கொண்டிருந்த
பூக்களில் நடனத்தை வேடிக்கை பார்க்கும் வண்டினம், துள்ளி வரும் அலையின் ஓசை கண்டு அஞ்சி முகம் புதைக்க வழி தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றன

. இயற்கை தாயின் இதயக்கனியாய் திகழும் நெய்தல் நிலத்தின் அழகு தலைவனே ,மணம் முடிக்கும் முன் உன்னுடன் கலவி புரிந்து விட்டேன் ..உன் நகக்கீறல்கள் மறைவு இடங்களை இருந்து எட்டி பார்க்கிறது ...

மார்பகத்தின் காம வெப்பம்பட்டு மார்கச்சை தன் நிலை மறந்து கைவிரித்து .நீ வந்து விட்டயா என மார்பகங்களை எட்டி பார்க்க வைக்கின்றன, வா தலைவா என்கிறாள்

இந்த பாடலில் இயற்கையை வர்ணித்த புலவன் அதில் ஒரு நெறிமுறையை கையாண்டு இருப்பான் ..புலவனுக்கு உள்ள கற்பனையது ஆனால் ..பெண்ணை வர்ணிக்கும்போது மட்டும் அவளை காமம் தேடி அலையும் பேதையாக ,மடமை பெண்ணாக குறிப்பிட்டு இருப்பான் .
.
ஆண் இனத்தின் வக்கிரம் இது . பண்டைய காலத்தின் அற்புத வர்ணனை என இதை சொல்லி இலக்கியவாதிகள் பெண் அடிமையானவள் என்பதை மறைமுகமாக உறுதி படுத்தி கொண்டு
இருக்கிறார்கள் ..நாமும் இதை காலகாலமாக நம்பி கொண்டு இருக்கிறோம் ..

மதமும் இலக்கியமும் பெண் இனத்தை அடிமைபடுத்திக் கொண்டிருந்த அந்த வேளையில் சமுதாயம் ஏற்படுத்திய கட்டமைப்புகளும் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை இட்டது ...

மனிதன் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்த வேளையில் பெண்கள் பொதுவான கணவன்மார்களை உடைய மனைவியாராக இருந்தார்கள் ..உடன் பிறந்தவர்களோடு உடலுறவு கொள்ள மட்டும் பெண்கள் அனுமதிக்க படவில்லை

மனிதனின் சிந்தை ஓட்டம் வேகம் பிடித்த காலத்தில் பலதார மணங்கள் அங்கீகரிக்கப்பட்டன.பல பெண்களோடு கலவி நடத்துவதை ஆண்கள் பெருமையாக கருதினார்கள் ..பெண்களுக்கும் அந்த அங்கீகாரம் சில காலாகட்டங்கள் வழங்கபட்டன..

பிறக்கின்ற குழந்தைகளோடு கொஞ்சி விளையாட நேரத்தை செலவிட முடியாமல் ஈன்றோர் தவித்தனர் . குழந்தைகளின் எதிர் காலம் கேள்வி குறியில் போய் படுக்கை போட்டு கொண்டது ..

பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் ,தனக்கு மட்டும் சொந்தமானவளாக பெண் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையை சமுதாயம் கொண்டு வந்தது ..
பெண்கள் மீது கற்பு நெறி என்ற சிறை . இந்த காலகட்டத்தில் புகுத்த பட்டது .பெண்ணை அடிமைபடுத்த ஆண் இனம் கையில் எடுத்த சிறப்பு ஆயுதமாக கற்பு இன்றுவரை மாறி போனது ..

காமம் ,உணர்ச்சி ,கலவி எல்லாம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் சரிபாதியாக இருக்கும் போது கற்பு மட்டும் பெண்களுக்கு உரியது என சமுதாயம் சொன்னது .ஆண்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு என பெண்கள் நம்பி கொண்டதால் ,அடிமை பொருளாக பெண்களை நிலை நிறுத்த ஆண்களால் முடிந்தது ..

ஆளுமையாய் திகழ வேண்டிய பெண் இனம் அடங்கி கிடைக்கும் பேதைமை பொருளாக மாறி போனது
காலத்தின் கொடுமை

இன்பா

எழுதியவர் : இன்பா (21-Apr-18, 6:33 pm)
சேர்த்தது : இன்பா மு ஞாசெ
பார்வை : 361

சிறந்த கட்டுரைகள்

மேலே