தேசியம் தேவையா -----------------------------------------

தேசியம் தேவையா .......?
-----------------------------------------
எல்லா மொழியினருக்கும் உகந்த நாடா இந்தியா? என்றால்,கொஞ்சமும் யோசிக்காமல் இல்லை என்றுதான் சொல்ல தோன்றும் .இந்தியா எப்போதும் இந்திக்காரன் நாடாக மட்டும்தான் இயங்கி கொண்டு இருக்கிறது .

தேசிய கட்சிகள் இந்தியை தமிழ் நாட்டில் திணித்த பொழுது எல்லாம் அதற்கு எதிரான நிலைபாட்டை தமிழன் எடுத்தான் எனில் இந்தியா தன்னை இந்தி நாடு என கட்டிக்கொள்ள விளைந்ததுதான் .

சுமார் 75000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன . இன்றைய மனிதர்களின் உடல் கூறுகளை ஒத்தவராக இருந்தார்கள் .அவர்கள் பேசிய மொழி தமிழ் சார்புடைய மொழி என்று சாந்தி பரப்பு என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு இனம் அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தது என்றும் ,இந்தியாவின் வளத்தை கண்டு மெய் மறந்து ,மனிதர்கள் யாரும் இல்லாத அப்பூமியில் தங்களின் வாழ்வியலை தொடங்கினார்கள் என்றும் ஆய்வுகள் சொல்லுகின்றன .இந்திய மண்ணில் குடியேறிய முதல் குடி தமிழ்தான் என்பது இன்னொரு வரலாற்று . பதிவு .
தமிழனுக்கு சொந்தமான மண்ணில் வந்து ஏறிய ஒரு நாடோடி
கூட்டத்தின் மொழியை தேசிய மொழியென இந்தியா எடுத்து கொண்டு . .தமிழ் மொழியையும் .தமிழ் சார்புடைய மொழிகளான தெலுங்கு .மலையாளம் .கன்னடம் ஆகிய பிற மொழிகளை தீண்டத்தகாத மொழியென காட்டிக் கொள்வதை தேசியம் என்று எப்படி எடுத்து கொள்ள முடியாது அதனால் தான் இந்தி திணிக்கப்படும் போது எல்லாம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறான் தமிழன் .

இந்தியை ஆளும் மொழியாக டெல்லி வாலாக்கள் பிரகடனபடுத்திய போது யாரும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை .இந்தியா வேற்றுமையில் ஓற்றுமை கண்ட நாடு என்ற வார்த்தை தான் எல்லோர் மனதிலும் முன் நின்றது .இந்தியை திணிக்கவேண்டும் என டெல்லி வாலாக்கள் நினைத்த போது தான் தேசியத்தின் மீது சந்தேகம் ஏழ ஆரம்பித்தது .

20 ஆம் நூற்றாண்டில் நடந்த விடயங்களில் பேசினால் கூட போதும் தேசியத்தின் மீது நமக்கு நம்பிக்கை அற்று போகும் .தேசிய கட்சியின் பிரதிநிதியாக சென்னை மாகாணத்தில் ராஜாஜி ஆட்சி செய்து கொண்டிருந்த போது ,குஜராத் காந்தியின் வழிகாட்டலில் இந்தியை தமிழ் பள்ளிக்கூடங்களில் பாடமாக திணித்தார் . ராஜாஜி டெல்லிக்கு காட்டிய விசுவாசம் அது .

21 - 04 -1938 சென்னை மாகாணத்தின் அரசவையை கூட்டி ராஜாஜி இந்தி திணிப்பு அறிவிப்பை வெளியிட்டார் . தமிழனை அடிமைப்படுத்த டெல்லி எடுத்த முயற்சியை கண்டு திராவிட கட்சிகள் போராட்டத்தில் குதித்தன .பெரியார் .மறைமலை அடிகளார் .சோம சுந்தர பாரதியார் ஆகியோர் தலைமையில் இந்திக்கு எதிர்ப்பான போராட்டங்கள் வெடித்தன .

ராணுவம் வரவழைக்கபட்டு போராட்டக்காரர்கள் ஒடுக்கபட்டனர் .மாணவர்கள் மத்தியில் போராட்டம் தீவீரம் அடைந்தது .தாளமுத்து நடராஜன், கோடம்பாக்கம் சிவலிங்கம் ,கிழபழவூர் சின்னசாமி ,விருகம்பாக்கம் அரங்கநாதன் .கீரனூர் முத்து,சிவகங்கை ராஜேந்திரன் .சத்தியமங்கலம் முத்து ,அய்யம்பாளையம் வீரப்பன் ,வீராலிமலை சண்முகம் .பீளமேடு சண்முகம் ,மயிலாடுதுறை சண்முகம் ,ஆகியோர் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னுயிரை இழந்தனர் .தேசிய அரசு தமிழன் இறந்ததை குறித்து கவலை கொள்ளவில்லை .இந்தி திணிப்பை தீவிரபடுத்துவதில் முனைப்பு காட்டியது .மக்களை நினைக்காத தேசியம் எப்படி போற்றபடும் ..

இந்தி எதிர்ப்பு போரட்டம் போலத்தான் இன்று காவேரிக்காக தமிழன் நிற்கிறான் .இங்கும் தேசிய கூட்டம் தமிழனை அழிக்க அனைத்து விடயங்களையும் எடுத்து களத்தில் நிற்கிறது .

ஒரு அரசாட்சி என்பது மக்களுக்காக இருக்க வேண்டும் .மக்களை அழிக்கும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் உணர்வுகளை புதைக்கும் எந்த அரசும் மக்கள் அரசாக இருக்காது .இன்று மோடி அரசு நடத்தும் நாடகம் தேசியத்தின் மீது எழுப்பும் கேள்வி குறி ..நாளை பிரிவினைகள் தலை தூக்கினால் அது மோடி அரசு விதைக்கும் வினை .....

எழுதியவர் : இன்பா (21-Apr-18, 6:44 pm)
சேர்த்தது : இன்பா மு ஞாசெ
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே