பிறவி
![](https://eluthu.com/images/loading.gif)
கூடிக் குலவிய
கலவியில் பெற்றது
மொத்தமும்
கைமாறிய மிச்சமாய்
நான்
கற்பிக்கும் காலம்
முன்னே செல்ல
அதன் கைபிடித்து
பின்னே செல்ல
கற்றதும்,கழித்ததும்
உற்றதாக
அதன் சொச்சமாய்
நான்
கால சுழற்சியின்
இடைவெளியில்
பரந்து விரிந்த
பெருவெளியில்
காய்ந்த தரையில்
துப்பிய எச்சமாய்
நான்.
நா.சே..,