இறுதி புன்னகை

மரணிக்க காத்திருக்கும்
மணித்துளிகள்...

பாவ புண்ணிய
கணக்கு புத்தகத்தின்
கடைசிப் பக்கத்தில் புதைந்திருக்கும்
விடைத்தாள் போல..
சிதறிக் கிடக்க!

பழகிய மணங்கள்,
விலகிய உறவுகள்,
விரும்பிய உணர்வுகள்,
பற்றிக் கொள்ளும் ஓலம்,
ஓர் அலையாய்
மனதை ஆட்பரிக்க..
பக்குவமாய் சிறு புன்னகை
என் கடைசி பதிவை
விட்டுச் செல்லட்டுமே!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (22-Apr-18, 1:01 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : iruthi punnakai
பார்வை : 189

மேலே