வெற்றி நமதே
சிலந்தி வலை சிதைந்து விடாமல்
சிக்கென்று பின்னலிட்டு சினக்காது
சின்ன சின்ன தூரிகை போல்
வலைவிரித்து வந்து விளையாடும்
இந்த புலிமயிர் சிலந்தியை
மன்னாதி மன்னனே பார்த்து வியந்து
தான் தோற்பது நிஜமுமல்ல
நியாயமுமல்ல முயன்று தான் பார்த்தானே
போரில் கொண்டானே அதன் பலனை
வெற்றியில் விடாமுயற்சி தான்
கரம் கொடுக்கும் என தானறிந்த
உண்மையை உலகெங்கும்
உணர்த்தி வைத்தான் ரொபர்ட் புரூஸ்
தோல்வி கண்டு துவளாதே மருளாதே
தொடர்ந்து செல் வெற்றி உனதே என
ஆணித்தரமாய் பதிய விட்டான் உலகில்
கோழைத்தனமே அது பொழைக்கத் தெரியாதவன்
நம்முள் படரவிட்ட பாழடைந்த வேர்
அதை களைந்து விட்டெறி வெற்றியே நம்மிடம்
வெற்றிமேல் வெற்றி வந்து எம்மை சேரும்