இது மனிதர் வாழும் பகுதி

ஒரு கானிக்கு தண்ணீர் விட என் கண்ணீர்கூட போதவில்லையடி கண்ணம்மா !!!

காவிகள் கூடி பல மக்கள் கூக்குரலிட்டு நல்லசெய்திகள் இங்கு எங்களுக்கு இல்லையடி கண்ணம்மா!!!

கருவறையில் உன் திருவடியில் மலரா மொட்டு அழிக்கப்பட்ட அன்று உணர்ந்தோம் உன்னை செதுக்கியதும் மனிதன்தானே ஆதலின் நீ வெறும் கற்சிலை என்றே அந்தோ கடவுள் இல்லா சன்னிதானம் பாரடி கண்ணம்மா!!!

தலைவனை நம்பி தன் வீட்டை மறந்த தொண்டன் நல்ல தலைமையை மறந்து சிலர் ஏற தன்மானம் விற்க்கும்
தலைவன் கதை கேளடி கண்ணம்மா!!!

யாதும் ஊரே யாவரும் கேளிர் மாற்றி
நீ வாழ்ந்தால் அல்லது வாழவிட்டால் அது ஊர் யாரேனும் மனிதம் கொண்டு உன் அன்பை மட்டும் எதிர்நோக்கின் அவரே கேளிர் ஏனெனில் இது மனிதர் வாழும் பகுதியடி கண்ணம்மா!!!

இவன்
இரா.விஸ்வநாதன்

எழுதியவர் : இரா.விஸ்வநாதன் (23-Apr-18, 4:19 pm)
சேர்த்தது : Viswa
பார்வை : 314

மேலே