மலரே என்னவன் எங்கே

மலரே......

உன்னை கடவுளின் காலடி முதல் இந்த உலங்கெங்கும் காண்கிறேன்....

இயற்கை தாயின் வனப்பில் இப்பூவுலகம் முழுவதும் குலுங்கும் நீ என் மன்னனை அறிவாயா?

அவன் காணக்கிடைக்காத பொக்கிஷம்... எனக்கு மட்டும்....

கண்களின் வழி நுழைந்து இதயத்தில் வீற்றிருக்கிறான் என்னவன்..

அவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் என்ற போதிலும் அவனை பிரியும் ஒரு நொடி கூட கசக்கிறது...

என் உள்ளம் உருகுகிறது அவனை எண்ணி..

ஏன்?

நீ கூறுவாய் மலரே... உன் மணத்தின் மூலம் என் மனம் உணர்ந்து என்னவனை கண்டறிவாயா?

என்னவன் அமுத மொழிகளை கேட்க நான் ஏங்குகிறேன்
காதலனின் முகம் காண துடிக்கிறேன்
கணவனின் ஸ்பரிசத்தை தொட ஆவல் கொள்கிறேன்
என் தலைவனின் கண்கள் புரியும் ஜாலத்தை காண விழைகிறேன்

என்னை வென்றவனும் குழந்தையாகி போவான் நான் கோபம் கொண்டால்
தலைவனான அவன் அன்பாலே விளக்கும் தந்தையாகி போவான் நான் தவறு செய்தால்
தந்தையான அவன் அன்னையாகி போவான் நான் சோர்ந்து போனால்

அவன் அன்பு இல்லா இந்த நொடிகூட என்னை வதைக்கிறது...

மனம் உலகத்தை வெறுக்கிறது...

மலரே.. உன் நறுமணம் என்னும் வலையின் துணை கொண்டு அவனை என்னிடம் சேர்த்து விடு...

எழுதியவர் : தமிழிசை (25-Apr-18, 4:20 pm)
சேர்த்தது : தமிழிசை
பார்வை : 417

மேலே