நெஞ்சில் விரியுது ஒரு நந்தவனம்

முதுமை வனத்தில் நடக்கும் மூத்த மனம்
கடைசிக் கதிர் சுருங்கும் வானத்தின் அஸ்தமனம்
கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமில்லை
நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்குது கவிதை மனம்
நெஞ்சில் விரியுது ஒரு நந்தவனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-18, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 106

மேலே