பிறந்தநாள் வாழ்த்து

இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
சாதி மதம் என்ற போர்வையில்
உன்னை நீ மறைத்து கொள்ள அல்ல
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
நீரை நாம் பகிர்ந்து கொள்வோம்
சகோதர்களாய் வாழ கற்று கொள்வோம்
என்று உறுதிமொழி ஏற்று நீ
பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள்

எழுதியவர் : உமாபாபுஜி (26-Apr-18, 9:50 pm)
சேர்த்தது : umababuji
பார்வை : 26324

மேலே