கொன்றால் பாவமாம்

வேட்டை ஆடிடும் பொழுது
ஒரே எண்ணம்...
ஆடப்படும் நேரம்
நூறு எண்ணங்கள்..
கொன்றால் பாவம்
தின்றால் போச்சு..
ஊண் மட்டுமா..?
இல்லை
உணர்வுகளுக்குமா..?
செரித்தால் கரைந்திடுமோ
பாவங்கள்...?
கழுவினால்...?
வரையறை கிடையாது
என்னால்
அழித்து அழித்து
தள்ளி வரையப்படும்
கோடுகளால்....
ஏனோ?
எட்டி வைத்தேன் நடையை
ஊர்ந்து சென்ற
அந்த ஒற்றை எறும்பு..!
ஆங்கே!
கதறிகொண்டிருந்தது
குரல்வளை அறுந்த
என் குலதெய்வ பலியாடு...

எழுதியவர் : சுரேஷ் குமார் (27-Apr-18, 12:23 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 786

மேலே