பூக்காரி -கங்கைமணி

கொண்டவனும் இல்லை ,
கொண்டவன் கொடுத்தவனும் இல்லை.
வயிற்றுக்காய்..உழைக்கிறாள்,தினம்
கயிற்றின்மேல் நடக்கிறாள்.

உழைப்பால் இவள் உயர்கிறாள் என்று
உழைப்பும் இவளை வாழ்த்துமே என்றும் !

அவள் பெற்ற பூக்கள்...,
வாடுமோ இல்லையோ ?!,ஆனால்
இவளை கூட இருந்து பார்த்ததால்..,
இவளின் கூடைப்பூக்கள் நிச்சயம் வாடும்!!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (27-Apr-18, 9:16 am)
பார்வை : 432

மேலே