முதுமொழிக் காஞ்சி 59

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இரத்தலி னூஉங் கிளிவர வில்லை. 9

- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் இரந்து உயிர்வாழ்வதை விட கீழ்மை இல்லை.

பதவுரை:

இரத்தலின் - பிச்சையெடுத்து உயிர் வாழ்வதைக் காட்டிலும், ஊங்கு - மேலான, இளிவரவு - இழிவு, இல்லை - வேறில்லை.

'ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில் 1066 இரவச்சம்.

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

'இரத்த லின்னூங் கிளிவர வில்லை' - இரத்திலினூங்காம் - பாடபேதம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Apr-18, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

சிறந்த கட்டுரைகள்

மேலே