மழை
கருதரித்த கார் மேகங்களின்
மழலையாக மழை அவள்
பிறக்க தந்தை அவன் மண்
எனும் மார்பில் தத்தி தவழ
வளர்ச்சியின் முதலாய்
நதியாக தனைப் போல்
மக்களில் நிறம் பாராது
தரம் பார்க்காது தவித்தவர்
தாகம் தீர்த்து உழவனின்
உழவுக்கு உதவிக்கு வந்து
உண்ண உணவு தந்து
பலன் ஏதும் பாராது பார்
முழுதும் பாய்கிறாள் அவள்....