மனிதன் மாறவில்லை

ஏறக்கட்டிய மழை
வேற்று முகம் காட்டும் மேகம்
காற்றின் வெப்ப ஸ்பரிஸம்
ஈரம் வற்றும் நீர்நிலைகள்
வறண்டு துவளும் உயிர்கள்
வாடித் தவிக்கும் பசுமைக்கோலங்கள்
அனுபவம் சொல்லுமா ஆறுதல்/
ஆறுவதும் தேறுவதும் நமது மனமே
பழகிப் போன மனித ஜாதி
பருவங்கள் மாற பக்குவ படுத்த
அரும்பெரும் மாற்றங்கள்
அத்தனையும் கண்டுவிட்டான்
எல்லாம் இருந்தும்
இயற்கையை அசைக்க இயாலாக்
கோழையே மனிதன்
இப்போது புரிகிறதா /
மனிதன் ஒரு
வரையறைக்குள் மட்டுமே
மனிதன் மாறவில்லை
அவன் மயக்கமும் ஏக்கமும் தீரவில்லை
மனிதன் என்றும் அவனேதான்
அவன் எட்ட முடியாதது எல்லையற்றவை
ஏக்கங்கள் தாக்கங்கள் நிறைய உண்டு
அவன்தான் மனிதன்

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Apr-18, 12:30 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 167

மேலே