நான் அறிந்த முதல் கவிதை
நான்
அறிந்த முதல் கவிதை
அம்மா!
கவிதை
கற்று கொடுத்தவளும்
அவள் தான்!
அழகாய்
எடுத்துரைக்க வைத்தவளும்
அவள் தான்,
ஒரே கவிதையை
தினமும் கேட்டு,
மெய் சிலிர்ப்பவலும்
அவள் தான்,
அதனால் தான் என்னவோ
இன்று வரை மனதில்
நிறைந்து நிற்கிறது,
நான்
அறிந்த முதல் கவிதை
என் அம்மாவாக!!!