கவின் மலர்
![](https://eluthu.com/images/loading.gif)
சிந்திக்க கற்றுக்கொடுத்தாள்
அவள் பெயர் மலர்
சிரிக்க கற்றுக்கொடுத்தாள்
அவள் பெயரும் மலர்
சிநேகிக்க கற்றுக்கொடுத்தாள்
அவள் பெயரும் மலர்
எல்லா நேரமும் நம் பிடியில் என்றாள்
அவள் பெயரும் மலர்
எதுகை மோனை கவிதையே நானென்றாள்
அவள் பெயரும் மலர்
எழுந்திருக்க மனமில்லாமல்
புத்தகத்தை புரட்டுகிறேன்
என் பெயரும் மலர்தான் என்றாள்
அவள் பெயரும் மலர்
மலராக பிறந்ததற்கு புண்ணியம்
செய்திருக்க வேண்டுமென்று
நினைத்துக் கொண்டேன்
அவள் பெயரில் மலராகிய நான்!!
மது மலராகிய நான்!!!