யார் அந்த சண்டாளி
![](https://eluthu.com/images/loading.gif)
எழுத்தாணியில் மை பூசி காகிதத்தில் எழுத கண்டிருக்கிறேன்
ஆனால் அவளோ கண்களில் மை பூசி என் இதய சுவற்றில் எழுதுகிறாள்.
வலித்தாலும் பரவாயில்லை உன் போக்கில் கிறுக்கிக்கொள் - உன்
கிறுக்கல்களும் எனக்கு கோலங்களே - ஆனால்
ஒன்று மட்டும் நினைவில் கொள்ளடி பெண்ணே, கிறுக்கல்களை சரி செய்ய நீ எழுதும் இடம் காகிதம் அல்ல, மாறாக என் இதயம்.
ஒரு முறை கிறுக்கினாலும் மிகச் சரியாக செய்து விடு.