கண்ணீர்

வெறும் உப்புச் சுவை உடைய நீர் தான்

ஆனால் அது

சில நேரங்களில்

கோடி இன்ப அணுக்களையும்

சில நேரங்களில்

கோடி துன்ப அணுக்களையும்

கொண்டிருக்கும்

கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும்

இதயம் பேசும் வார்த்தைகள்,

ஒருவரது விழியில் வழியும் கண்ணீரை கண்டு

துடைக்காத கரங்கள்

உடலில் இருந்தென்ன பலன் ?

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 10:58 pm)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : kanneer
பார்வை : 56

மேலே