வேலையில்லா பட்டதாரி

காத்திருந்து காலம் கழிந்தது

மரியாதை இழப்போம்

தேநீரில் பசி தீரும்

உமிழ்நீரில் தாகம் தீரும்

ரயில் நிலையம் வீடாகும்

அங்கு பலர் தினமும் வந்து செல்வர்

பழைய நினைவுகளும்

வந்து செல்லும்

கண்ணீர் துளியும்

அவ்வப்போது வந்து செல்லும்

அன்னதானத்தின் போது மட்டும்

நாங்கள் ஆர்த்திகர்களாக மாறுவோம்

நான் பிச்சைக்காரன் அல்ல

ஒரு வேலையில்லா பட்டதாரி

எழுதியவர் : நா.கோபால் (2-May-18, 7:47 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 53

மேலே