கல்லூரியின் இறுதி நாள்
ஒவ்வொரு ஜுலை மாதமும்
கல்லூரிகள் புத்துணர்ச்சி பெறுகின்றன
வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும்
மாணவர்களை காண்பதற்காக
முதல் வருடத்தில்
பலமுறை நினைத்திருப்போம்
பள்ளியிலேயே இருந்திருக்கலாம் என்று
அந்தக் கவலையை நீக்கியவர்கள்
நம் நண்பர்கள் தானே!
ஜன்னல் வழியே
ஜூனியர் ஒருத்தி
கடந்து செல்லும் போது
பாடத்தையா ரசித்தோம்? 
மலர் டீச்சர் போல்
ஒரு டீச்சர் வேண்டும் என்று
பலமுறை ஏங்கினோம் 
பங்க் , மாஸ் பங்க் ஆகியவற்றை
அடிக்கடி நிகழ்த்தினோம்
பாட்டி இறந்துவிட்டார்
தாத்தா இறந்துவிட்டார்
தலைவலி
காய்ச்சல்
என என்ன சொன்னாலும்
அதற்காக வருந்தும் HOD
இனி எங்கு கிடைப்பார் !
படிப்பதற்காக அளித்த
விடுமுறை நாட்களை
படிப்பதற்காகவா பயன்படுத்தினோம்?
தேர்வுக்கு முந்தைய நாள்
இரவை மட்டுமே பயன்படுத்தினோம்
டிசம்பர் மாதந்தோறும்
மழை பகவான்
ரமணனை வணங்கினோம்
தானே புயலும்
வர்தா புயலும்
சென்னை மக்களுக்கு
பெருந்துன்பத்தை தந்து சென்றன
ஆனால் நமக்கு பேரானந்தத்தையே
தந்து சென்றன
நண்பர்களுடன் கலந்து கொண்ட
ஜல்லிக்கட்டு போராட்டம்
மறக்க முடியாத ஒரு அனுபவம்
ஒவ்வொரு மார்ச் மாதமும்
கல்லூரிகள் கண்ணீர்விடுகின்றன
தனக்கு நிரந்தரமான மாணவர்கள்
இல்லையென்பதால்
தினந்தோறும் திட்டிக்கொண்டே இருக்கும்
ஆசிரியர் இறுதி நாளில்
கண்ணீர் விடுவது
எத்தனை பேருக்கு தெரியும்
இணைவதும் பிரிவதும்
இயற்கை நண்பா!
வாழும் நாட்களில்
நல்ல நினைவுகளை
சேர்த்து வைத்துக்கொள்
அதை விட மிகப்பெரிய சொத்து
இவ்வுலகில் கிடையாது