காகிதமே ஒரு கவி எழுது

காகிதமே ஒரு கவி எழுது
அதில் நீ என் காதலியின் நினைவுகளை பொட்டெழுத்து !
செல்லமா பாத்தெழுது
அதில் அவள் சிரிப்புக்களை கோர்த்தெழுது!!
சிணுங்குற வளையல் சத்தம்மெழுது
அதில் அவளின் சிவந்த காதோரம் கதை பேசும் கம்பளை கேட்டெழுது !!!
வண்ணம் போல் கலந்தெழுது
அதில் அவள் வருகையின் அழகை சேர்த்தெழுது !!!!
மின்னலைப் போல் இடித்தெழுது
அவள் இரவிலும் மின்மினிதான் என எண்ணி எழுது!!!!!
பெண்ணிலே கலந்தெழுது
அதில் இவள் பேரழகியென என்சொல்லை அவளிடம் சொல்லி எழுது!!!!!!
மண்ணிலே சிறந்தவளை புகழுந்தெழுது
என் மனதிலே அவள் புகுந்துவிட்டால் அவள் புரிந்திட காகிதமே நீ ஒரு கவி எழுது .
படைப்பு
ரவி.சு