நவீன அரசியல்
இன்றைய
அரசியல் கட்சிகளுக்கு
தொலைநோக்குப் பார்வை
இருக்கிறதோ இல்லையோ
தொலைக்காட்சி இருக்கிறது...
குறிக்கோள்
இருக்கிறதோ இல்லையோ
குண்டர்கள் இருக்கின்றனர்....
கொள்கை
இருக்கிறதோ இல்லையோ
செய்தித்தாளுக்கு குறைவில்லை...
மக்கள் ஏற்றத்திற்கு
திட்டம்
போடுகின்றார்களோ இல்லையோ
மக்களை ஏமாற்றுவதற்கு
சட்டம் போடுகின்றார்கள்....
குடி மக்களை
காப்பாறுகிறார்களோ இல்லையோ
தன் குடும்பத்தை
காப்பாற்றிக் கொள்கினறனர்...!
-கவிதை ரசிகன்

